படித்தாலே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை 'சோ'அவர்களுடையது. அவர் எழுதிய 'சாதல் இல்லையேல் காதல்' நாடகத்தில் இருந்து ஒரு பகுதி.1965ல் கல்கியில் வெளிவந்தது.படித்துவயிறு குலுங்க நீங்களும் சிரியுங்கள்!இதைப் படிக்கும் போது ‘பொம்மலாட்டம்','நினைவில் நின்றவள்' போன்ற படங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
காட்சி : இதை வீடு என்பதைவிட,மாளிகை என்று அழைப்பதே பொருந்தும்.பம்பாயில்சாதாரணமாக இம்மாதிரியான வீடுகளில் குறைந்தது ஐம்பது குடும்பங்களாவது வசிக்கலாம்.ஆனால் இந்த வீட்டிலோ சபேசன் ஒருவர் மட்டுமே வாழ்கிறார்.வீடுகளைப் புறாக் கூண்டுகள்போலகட்டி,கிடைத்தபொந்துகளிலெல்லாம் பல குடும்பங்கள் வாழ்கின்ற பம்பாய் நகரத்தில் இம்மாதிரி ஒரு சில மாளிகைகளில்,ஒரு சில மனிதர்கள் மட்டுமே வாழும் விந்தையை பார்க்கிறோம்.சபேசன் தமது அறையில் ஒரு பலகையை ஸ்டாண்டில் சாய்த்து நிற்க வைத்து, சித்திரம் வரைந்துகொண்டிருக்கிறார்.இது அவருடைய பொழுதுபோக்கு. அறைக்குள் சுரேஷ் நுழைகிறான்.
சுரே: பிரமாதம் சார்! பிரமாதம்!
சபே: யாரு? நீயா?
சுரே: ஆமாம் சார், நான்தான்.
சபே: ஓ! நீதானா?
சுரே: குட் ஈவினிங் சார்!
சபே: குட் ஈவினிங்... ஆமாம் என்ன வேணும்?
சுரே: சார்..!
சபே: இரு இரு.. சுரேஷ்,இந்த படம் எப்படி?
சுரே: பிரமாதம் சார்.
சபே: நல்லா பார்த்து சொல்லு.
சுரே: (பார்க்கிறான்) ஐயோ! ஐயோ!... ஐய்யோ!
சபே: என்ன? என்ன?
சுரே: ரொம்பப் பிரமாதம் ஐயோ!... ஆஹா!
சபே: நிஜமாவா?
சுரே: நிஜம்மா சார்!... சாதாரண விஷயம்.அதை எவ்வளவு அழகா வரைஞ்சிருக்கீங்க...ஒண்ணுமில்லே.. சேற்றிலே இரண்டு எருமைக்கடா குதிக்கிறது.அதை எவ்வளவு அழகா...
சபே: இருய்யா.என்ன விளையாடறியா?
சுரே: ஏன் சார்?
சபே: இது ரெண்டும் எருமைக்கடாவா? (சித்திரத்தைக்காட்டுகிறார்.)
சுரே: இல்லையா? எருமைக்கடாதானே சார்?
சபே: நீதானய்யா எருமைக்கடா.. இது இரண்டு பசங்க... மனுஷங்க!
சுரே: கொம்பு இருக்கே சார்! ஒவ்வொரு தலைக்கும் இரண்டு கொம்புகள் போட்டிருக்கீங்களே?
சபே: எது இது கொம்பா? கர்மம்! இது அந்தபசங்களுடைய கைகள்! ரெண்டு பேரும் கையைஅப்படி வளைச்சுத் தலைக்கு மேலே தூக்கிக்கிட்ட்டு நிக்கிறாங்க...(தாமே அம்மாதிரி வளைத்துக்காட்டுகிறார்)
சுரே: சார்,ப்ளீஸ்! அந்தமாதிரி நிக்காதீங்க. உங்களைப்பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கு...
சபே: சுரேஷ்!உன் தமாஷெல்லாம் நம்ம கிட்ட வேணாம்.ஏனய்யா உனக்கு அறிவு இருக்கா?இதை எப்படி எருமைன்னு சொன்னே!
சுரே: ஆளுக்கு நாலு கால் போட்டிருக்கிங்களே சார்.
சபே: அது கால் இல்லையா! கம்பி! அவுங்க நீச்சல் குளம்-ஸ்விம்மிங் பூல்லே-கம்பிகள்நடுவிலே நிக்கிறாங்க.
சுரே: நீங்க தப்பு பண்ணிட்டிங்க சார்.அவுங்க ஜலத்தில் குதிச்சப் பிறகு நீங்க படத்தைப் போட்டுஇருக்கணும்.வெறும் தண்ணியை மட்டும் போட்டு விட்டு இருக்கலாமே!
சபே: ஷட் அப்!
சுரே: சார், எக்ஸ்க்யூஸ்மீ! ஸ்விம்மிங் பூல்ன்னு சொல்றீங்க... நீச்சல் குளத்திலே ஜலம்ஒண்ணு நீலமா யிருக்கும்,இல்லை கொஞ்சம் பச்சையா இருக்கும்.நீங்க என்ன சார் இப்படிச்சேறு மாதிரி வர்ணத்தைப் பூசி விட்டிருக்கீங்க?
சபே: உனக்கு ஒரு எழவும் புரியாது. நிறையப் பேர் குளிச்சுபுட்டாங்க.. தண்ணி சேறாப் போயிடுச்சி! அத்தனை பேர் இறங்கிக் குளிச்ச பிறகு தண்ணி கிளீனாவா இருக்கும்?
சுரே: ஓ!அப்படியா அது? ஆமாம்... வேறே யாரையும் காணமே?
சபே: (எரிச்சலோடு) உம்...போடறேனய்யா, குளிச்சவங்க அப்பன்,பாட்டன்,பேரன் பேத்தி,எல்லோரையும் போடறேன்யா! யோவ்! உனக்கு 'மாடர்ன் ஆர்ட்'டைப்பத்தி ஒரு எழவும்தெரியாது...
சுரே: ஓ! இதுதான் மாடர்ன் ஆர்ட்டா? அதை முதலிலேயே சொல்லி இருக்ககூடாதா?சார்.நான் ஒண்ணும் சொல்லியே இருக்க மாட்டேனே.. நீங்க ஒண்ணு பண்ணுங்க. இந்தப் படத்தைதலைகீழா மாட்டிடுங்க.
சபே: எனய்யா?
சுரே: மாடர்ன் ஆர்ட் வரையறவுங்க அப்படித்தான் செய்யறாங்க. படத்தை எழுதி தலைகீழாமாட்டிப்பிடுங்க... அதுக்கு ஒரு பேர் மட்டும் நேரா எழுதிடுங்க...
சபே: பேர் மட்டும் நேரா எழுதுவானேன்?
சுரே: படத்துக்கு என்னா பேருன்னு புரியாம போயிடுமே?
சபே: படம் புரியாம இருந்தாப் பரவாயில்லையா?
சுரே: அப்ப்த்தான் அது மாடர்ன் ஆர்ட்?
சபே: இதுக்கு என்னய்யா பேரு வைக்கலாம்?
சுரே: “நீச்செருமைக்குளக்கொம்ப்”
சபே: ஏய்! என்னய்யா இதுக்கு அர்த்தம்?
சுரே: அர்த்தத்தைப் பற்றி நம்க்கென்ன கவலை? பார்க்கிறவங்க அவங்க அவங்க இஷ்டப்படிஅர்த்தம் பண்ணிக்கட்டும்.
சபே: நாலு பேர்கள் பார்த்தா நாலு விதமா அர்த்தம் புரிஞ்சுப்பாங்க.
சுரே: அதுதான் வேண்டியது. உடனே நீங்க பெரிய ஆர்டிஸ்ட் ஆயிடுவீங்க.
சபே: உன்னோட பேசினாலேயே பைத்தியம் பிடிச்சுடுமய்யா.
சாதல் இல்லையேல் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//சுரே: சார், எக்ஸ்க்யூஸ்மீ! ஸ்விம்மிங் பூல்ன்னு சொல்றீங்க... நீச்சல் குளத்திலே ஜலம்ஒண்ணு நீலமா யிருக்கும்,இல்லை கொஞ்சம் பச்சையா இருக்கும்.நீங்க என்ன சார் இப்படிச்சேறு மாதிரி வர்ணத்தைப் பூசி விட்டிருக்கீங்க?
சபே: உனக்கு ஒரு எழவும் புரியாது. நிறையப் பேர் குளிச்சுபுட்டாங்க.. தண்ணி சேறாப் போயிடுச்சி! அத்தனை பேர் இறங்கிக் குளிச்ச பிறகு தண்ணி கிளீனாவா இருக்கும்?//
இந்த மாதிரி சடயர் நகைச்சுவை
"சோ" அவர்களுக்கே உரித்தானது
jokes are nice......
ச்சூப்ப்ர்!
Post a Comment