சோதனை

· 0 comments

சோதனை

பிரகாஷ்ராஜிற்கு கொழுப்பா?

· 2 comments

வித்தியாசமான வில்லத்தன நடிப்பாலும், வசீகரிக்கும் குணச்சித்திர நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.



அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு குண்டடித்து விட்டார். கொழுப்ப அதிகமானதால் முன்புபோல சுறுசுறுப்பாக 4நடிக்க முடியவில்லை என கருதிய பிரகாஷ்ராஜ், கொழுப்‌பை குறைக்கும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்துள்ளாராம்.

நேரு குடும்பத்தின் 1000 மாவது தியாகம்!

· 10 comments

மத்திய மந்திரி சபை நேற்று விரிவு படுத்தப்பட்டது. புதிய மந்திரிகள் பதவி ஏற்ற பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியை நிருபர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி மறுத்து விட்டார்
இன்று நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் ராகுல் காந்தியை சேர்க்க நான் விரும்பினேன். மத்திய மந்திரி சபையில் அவர் இடம் பெற வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
ஆனால் அவர் மந்திரி பதவி ஏற்க உறுதியாக மறுத்து விட்டார். கட்சியில் தனக்கு பெரிய, முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் தான் மந்திரி சபையில் இடம் பெற விரும்ப வில்லை என்றும் கூறி அவர் மறுத்து விட்டார்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்....

கலைஞர் கருணாநிதியின் கையாலாகாத்தனம்!.

· 10 comments

ஒகேனக்கல் விஷயத்தில் கருணாநிதியின் அறிவிப்பு அவரைப் பற்றி,அவரது அரசியலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு எந்தவித ஆர்ச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்காது!.அவருடைய கையாலாகத்தனம்,பல சந்தர்ப்ப்ங்களில் நாம் பார்த்த ஒன்று.பொதுவாகவே அவருடைய கையாலாகாத்தனத்திற்க்கு, அவருடைய அரசியல் பேராசையே காரணம். அவர் எப்போதுமே தம்(குடும்ப)நலத்தைத் தவிர, தமிழர்களின் நலனை சிந்தித்ததே இல்லை.நான்கைந்து மாதங்களாகவே ஒகேனக்கல்லில் கன்னட அமைப்பினர் ஒரு குறிப்பிட்ட மணல் திட்டின் மீது உரிமை கொண்டாடி பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.அப்போதே அந்த விஷயத்தை அடக்கி இருக்கலாம்.

1974-ல் இதேகாங்கிரசுக்காக, காங்கிரஸின், கர்நாடக ஓட்டுகளுக்குக்காகஇந்திராவிடம், காவிரியை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டின் நலனை அதே காவிரியிலேயே தலை முழுகினார்.இப்போதும் அதே காங்கிரசுக்காக ஒகேனக்கல் விஷயத்தில் அடங்கி, குடிநீர் திட்டத்தை கை விடத் தொடங்கி விட்டார்.சோனியா ஜாடை காட்டியவுடன் இவர்அடங்கிவிட்டார்.தேசியகட்சிகளெல்லாம் மாநில கட்சிகளைப் போன்று குறிப்பிட்ட எல்லையில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டன.ஆனால் கருணாநிதி அடங்கிப்போய் தன் மாநில நலனை விட்டுக்கொடுத்து தம்முடைய தேசிய உணர்ச்சியைக் காட்டுகிறார்.

வாய் சொல்லில் வீரரடி என்று பாரதி கருணாநிதிக்காகவே பாடினார் போலிருக்கிறது!.

சோனியா அரசியலுக்கு வரக்கூடாது..ராஜீவ்காந்தி!

· 4 comments

வருடைய பேரே நமக்கு குழப்பம்!

தென்னாட்டவர்கள் சொல்வது போல் இராஜீவ் அல்லது வடநாட்டவர்கள் சொல்வது போல் ரஜிவ் காந்தி .அவருடைய ஆவியுடன்! பேசும் போது அவர் ஆவியாக?! சொன்ன தகவல்.

குமுதம் இதழில், 1996-ம் ஆண்டு அதிமுக வுடன் தேர்தலில் கூட்டு சேரலாமா கூட்டு சேரக்கூடதா என்று காங்கிரஸ் பேரியக்கம்!!!!!!(என்ன கொடுமை சரவணன் இது). முக்கிக்கொண்டிருக்கும் போது ஸ்கூப்பிற்க்காக குமுதம் ஆவி மீடியேட்டரை பிடிச்சி போட்ட நியூஸ் இது!.
ஒரே ஒரு பிட்டுத்தான்! படியுங்கள்!.

கேள்வி: சோனியா காந்தி,பிரியங்கா,அரசியலுக்கு வருவதை நீங்கள் விரும்புகிறீர்களா?.

பதில்: (......ஹூஊஊஊஉ......பயப்படாதீர்கள்..இது ராஜீவ் ஆவி)
நிச்சயமாக விரும்பவில்லை!.

கேள்வி: ஏன் வரக்கூடாது,அவர்கள் உங்களுடைய எண்ணங்களை,கனவுகளை நன்கு அறிந்தவர்கள்,அவர்கள் வந்து அவற்றை நிறைவேற்ற முடியுமே?

பதில்: (மறுபடியும் ராஜீவ் ஆவி)
இந்த அரசியல் சகதியில் என் குடும்பத்தினர் எவருமே ஈடுபடுவதை நான் சுத்தமாக விரும்பவில்லை!.அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்கத்தான் நான் விரும்புகிறேன்!.

அடுத்தது இம்மாதிரியே கேள்விகள் வந்தன... போயின..

ஆனால் ராஜீவ்வின் ஆசையை சொந்த மனைவியே கண்டுகொள்ளவில்லை. அப்புறம் என்னா வெங்காயத்துக்கு நாங்கெல்லாம் கண்டுகொள்ளனும்.எல்லா காங்கிரஸ்காரர்களும் என்ன முடிவு செஞ்சாஞ்கண்ணு தான் நாமெல்லாம் பார்த்தோமே!
ராஜீவ்வை ("வ்" போடனுமா? கூடாதா? )மதிப்பவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்!.
கெட்டதிற்க்கு எதிர்ப்பதம் நல்லது என்பது நமக்குத் தெரியாதா?

யார் அந்த ஹீரோ --- மர்மம் தெளிகிறது!

· 15 comments

ண்ணியடிக்கிறதுன்னா எத்தனையோ சாக்கு போக்கு சொல்லிட்டு ஓடுறதில் நான் பழைய தமிழ்குடி!. நம்ம 'வால் பையன்' மாதிரி.அவராவது கொஞ்சம் சூழ்நிலைய பாப்பாரு!?..
நான் அதிலேயும்மோசம் .சும்மா ஸ்கூலு பெல் அடிச்ச மாதிரி ஓடுவெம்பாருங்க. ஊரே பாக்கும்! ரொம்ப வெக்கமாஇருக்குங்க!.

இன்னிக்கு காலையிலெ இருந்தே ஒரே டென்ஷன் . அதாவதுங்க ஒரு தறிக்காரரரு ஒரு டிசைனை தப்புத்தப்பா ஓட்டிக்கிட்டு வந்து காட்டுனாருங்க. (நீ என்னடா வேலை செய்யுர டுபுக்குன்றீங்களா?நமக்குத் தொழில் இசைத்தல் அங்குற மாதிரி இது நெசத்தல்!) அதுவும் பட்டு
சேலைங்களா... எனக்குசரியான கோவங்க! என்ன ஒன்னா ரெண்டா சும்மா இருக்கிறதக்கு.
அவருகிட்ட சரி செய்ய சொல்லிபேசிப் பேசியே மாஞ்சிபோச்சிங்க. அவரு கேட்டுப்புட்டு
போறப்பவே மணி ஆறாயிப் போய்டுச்சி.

அதுக்கு அப்புறமா வீட்டுக்கு போயி மூஞ்சி கழுவிட்டு வரலாம்முன்னு வீட்டுக்குப் போனங்க.
அப்பதாங்க வந்துச்சிங்க அந்த போனு!.

கரூரிலே இருந்து, நான் முன்ன ஆர்டர் செஞ்ச,அதாவது (ரொம்ப அதாவது இல்லீங்களா?) அப்போ நான் காட்டன் பண்ணிக்கிட்டிருந்தப்போ (சேலத்துல பட்டு,காட்டன்,பாலியெஸ்ட்டர்
எல்லாம் பண்ணு வாங்க) நான் ஆர்டர் செஞ்ச ஆபிசில் வேலை செஞ்சவங்க.அதுல ஒருத்தர்
ரொம்ப நண்பர் போன்செஞ்சார்.'நான் இப்போ சேலத்துலதான் இருக்கிறேன். உங்க கிட்ட
பேசணுமே வர்ரிங்களா?'.. ன்னார்.அதுக்கு அர்த்தமே டேய் என் வேலை முடிஞ்சுபோச்சி இப்போ நான் ஊருக்குப் போறேன்.தண்ணியடிக்க வர்றியா?.

(இது 'இளைய கவி' இல்லை. அவர் குடிப்பதே இல்லன்னு தேவி ஜக்கம்மா மீது சத்தியம் செஞ்சுநல்ல பாதையில் போயி அங்கு சரியான படி செல் டவர் கிடைக்க வில்லை என்று
பீர் மட்டும் குடிப்பேன் என்ற குடி பாதையில் திரும்பி, வரும் வழியில் குறுக்குப்பாதையில்
வோட்கா வாங்கி வந்து தனிப்பாதையில் ஒரு குவார்டரை ஒரே கட்டிங்கில் இழுத்துவிட்டு, சீரியஸ்ஸாக,கரூர்செல்வதாக கூறிவிட்டு, ஈரோடு பஸ்ஸில் ஏறி நமக்கு சிரித்துக் கொண்டே
டாடா காண்பிக்கும் போது எனக்குகானா காலங்கள் 'ப்ளாக் பாண்டி','புலி' ஞாபகம் ஏனோ வந்தது..
இளைய கவி ... தயை கூர்ந்து மன்னிக்கவும்...)
இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.போன் வந்ததும் பல சாக்குகளை வீட்டில் சொல்லி
விட்டு,நான் தான் சந்துலசாக்கு போக்கு தெடற ஆள் ஆச்சே!. நரசுஸ் காபி போல சுடசுட ஆவி பறக்க பறந்தேன்!.
என்னடா இவன் 6 மணிக்கே போகின்றான் என எண்ணாதீர்கள்.கூப்பிட்ட நண்பன் 9 மணிக்கே வீட்டிற்க்குபோக வேண்டுமாம்!.நான் எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன!.அவனுடைய வீட்டில்
அவன் ரொம்ம்ம்ப! .....நல்லவனாம்!.தண்ணி அடிச்ச கதை இப்ப வேணாம்!.
அதப் பத்தி பேசுறத்துக்கு நான் இதை எழுதவில்லையே!.அதனால் இந்த மேட்டரு இப்போ இப்போதைக்கு முடியுது.

பின்னாடி எழுதறப்போது பாப்போம்!

வீட்டிற்கு வரும் போதே லேசான தடுமாற்றம் இருந்தது.வீடு மாடியில்,எனவே பெல் அடித்தவுடன் சாவி மேலே இருந்து ஒரு பை மூலம் கீழே வந்தது.கதவைத் திறந்து படி ஏறும்
போதே,கால்கள்முன்னும் பின்னும் சாமியாடியது.தண்ணீரில்இருந்து தரைக்கு வந்த சிறு வாத்தைப் போல மெல்ல தத்தித் தத்தி நடந்தேன்.
படியின் ஒரு பக்கமுள்ள,ஏணியை பக்கவாட்டில் நிறுத்தி வைத்ததை போல் இருந்த, இரும்பு கைப்பிடியை கொடி போல தழுவினேன்.எம்ஜிஆரின் அரசகட்டளைப் படத்தில் வந்தபாட்டுப் போல ஆடி வா.. ஆடி வா .. ஆடி வா! என்று கொடியைப் பிடித்துக் கொண்டு பாட வில்லை,
மாறக,ஆடாமல் போ...ஆடாமல் போ... ஆடாமல் போ, என்று என்னை நானே எச்சரித்துக்
கொண்டு மாடிக் கைப்பிடிக் கொடியில் ஊஞ்சல் ஆடியபடியே ஏறினேன்.
ஏறும் போதே மாடியில் இருந்து டமால்,டுமீல்ன்னு சத்தம் வந்து கொண்டு இருந்தது.
பயப்படாதிங்க!.விஷயம் என்னன்னா?

வீட்டுக்கு வரும்போது HBO வில ஒரு படம் ஓடிக்கிட்டிருந்துச்சி. என்ன படம்....,பாருங்க, ரொம்ப நேரம் கழிச்சி எழுதுறதுனாலெபடம் பேரு சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேன்னுது.
ஆங்.. தி மாஸ்க் ன்ற படம் .அதில நடிச்ச ஹீரோ பேரு என்னான்னு என் ஊட்ல கேக்க ,
அந்தக் கொடுமையப் பாருங்க, சட்டன்னு சுவிட்சஆப் பண்ணாப்புல அந்த ஹீரோ பேரு மறந்து போயிடுச்சி!.அடக் கொடுமையே இப்பிடி கூட ஆவுமான்னு நான் அவர் பேரையோசனை
பண்ண ஆரம்பிச்சேன்.மப்பால மறந்து போன மாதிரி தெரியக்கூடாதுன்னுட்டு,இல்லேன்னா ஒவர் தண்ணீன்னுதெரிஞ்சிடும்.அதனால யோசனைப் பண்ற மாதிரி தெரிஞ்ச இங்கிலீசு பட நடிகர் பேரயெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன்.

டாம் குருஸா, இல்லியே, அர்நால்டா.. அட அவரு என்னா பாடி!. ராபின் வில்லியம்ஸா.. ம் ஹும் அவரில்லையே பேருக்குள்ளெ கே மாதிரி ஒரு எழுத்து வருமே!.கிரி கிரி பெக்கா அவரு பழைய நடிகராச்சே!. இப்பிடி நான் என்ன தின்னேன்னு தெரியாமயேகை கழுவினேன்.
என் ஊட்டுக்காரம்மா என்னை சிந்தனைக் கடல்ல,தள்ளி விட்டுடு நான் தத்தளிக்கிறது தெரியாம அப்புராணியா தூங்கிட்டாப்புல!.நான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவே
இல்லை.ஒரு மணியிருக்கும், பளிச்சுன்னு மூளைக்குள்ளெ யாரோ டார்ச் லைட் அடிச்ச மாதிரி
ஒரு வெளிச்சம்!. அட கேரி... என்னா கேரிஆங் ... ஜின் கேரி சீச்சீ ஜின் இல்ல ..ஜிம் கேரி.

அப்பாடா இப்பத்தான் மக்களே நிம்மதியாச்சு!.தண்ணி அடிக்கும் போது முதல்
ரவுண்டில சும்மா குப்புன்னு இருக்கும்.அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ரவுண்டு அடிக்கும் போது ஒரு தெளிவுகிடைக்கும். அந்த மாதிரி ஒரு தெளிவு, இப்ப கிடைச்சப்புறம் தான் எனக்கு தூக்கமே வந்துச்சு!



மதுக்கடைகளை ஒழிப்போம்---- திமுக

· 4 comments

சென்னை: ‘மதுபானக் கடைகளை மூடினால், கள்ளச் சாராயம் தமிழகத்தில் ஆறாக ஓடும். அதனால், லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும்’ என்று சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த பொது விவாதம்:
எதிரொலி மணியன் (பா.ம.க.,): தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் குடிக் கின்றனர். வாழ்வுக்கும் குடிக்கின்றனர்; சாவுக்கும் குடிக்கின்றனர். வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்ற நிலை உள்ளது. இந்த ஆண்டு ‘டாஸ்மாக்’ வருமானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானம். எங்களைப் பொறுத்தவரை அது பெண்களின் கண்ணீரில் கிடைக்கும் வருமானம். அ.தி.மு.க.,வும்-தி.மு.க., வும் போட்டி போட்டுக் கொண்டு மதுக் கடைகளை திறந்துள்ளன.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: ஒருவரை பகைத்துக் கொண்டால் பரவாயில்லை. இரண்டு தரப்பையும் பகைத்துக் கொண்டால், நீங்கள் எங்கு நிற்பீர்கள்?
அமைச்சர் எ.வ.வேலு: தமிழகத் தைச் சுற்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மது விற் பனை நடக்கிறது. முன்பு சனி, ஞாயிறு கிழமைகளில் புதுச்சேரியிலும், பெங்களூருவிலும் உள்ள ‘பார்’கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். அப்படி வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்தது. அதை தடுக்கத் தான் இங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
எதிரொலி மணியன்: மகாராஷ்டிராவில் படிப்படியாக மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள் ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என பாட்டிலில் போட்டு விட்டு, அரசே அதை விற்கிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மது விலக்கை தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால் சரியாக இருக் காது. இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் விற்கலாம். தமிழகத்தில் மட் டும் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும். லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த காரணத்தைக் கூறித் தான் எம்.ஜி.ஆர்., மது விற்பனையை கொண்டு வந்தார். அதே கருத்தை தான் இந்த அரசும் கொண்டுள்ளது.
வேல்முருகன் (பா.ம.க.,): போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு கடுமையாக உத்தரவு போட்டு, கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆற்காடு வீராசாமி: ‘டாஸ் மாக்’ கடைகள் இருப்பதால் தான் தமிழகத்தில் கள்ளச் சாராயம் இல்லை. மூடி விட்டால், சாராயம் ஆறாக ஓடும். மத்தியில் அமைச்சராக உள்ள அன்புமணியிடம் கூறி, பிரதமரிடமும் சோனியாவிடமும் பேசி, இந்தியா முழுக்க மது விலக்கை அமல் படுத்துமாறு வலியுறுத் தச் சொல்லுங்கள். அப்படி நடந் தால், இங்கும் மது விலக்கை அமல்படுத்த தயார்.
எதிரொலி மணியன்: மூன்று கி.மீ., க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்று கேட்டால் விதிமுறைகளை காட்டுகிறீர்கள். ஆனால், மதுக் கடைகளை மட்டும் மூன்று கி.மீ.,க்கு ஒன்று திறப்பதற்கு எப்படி வசதி வந்தது? இவ்வாறு விவாதம் நடந்தது.


நன்றி : தினமலர்


மேலே உள்ள செய்தியைப் படித்தீர்களா?.
இப்போது அடியில் காணும் அறிக்கையைப் படியுங்கள்!. இவ்விரண்டும் ஒரே கட்சியின் statement.என்னமுதலில் உள்ளது ஆளுங்கட்சியாக இருக்கும் போது உள்ள நிலை!.

கீழே உள்ளது எதிர்கட்சியாக இருந்த போது இருந்த நிலை!.எத்தனை முரண்பாடு, இந்த இரண்டிற்க்கும் என்று, நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

1984-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக வின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி.

துபானகடைகளைத் திறந்து இதன் காரணமாகக் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுவருவதை நாட்டு மக்கள் நன்குஅறிவர்.
நாங்கள் இந்த நாற்றமெடுத்துக் கிடக்கும் சாராய சாம்ராஜ்யத்திற்க்கு முடிவு கட்டியே தீருவோம் என்று உறுதி கூறுகிறோம்.
கழக ஆட்சியில் கடுகளவு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றைத் திருத்திக்கொள்ள நாங்கள்தவறியதே இல்லை.
இன்றோ கடலளவு தவறுகள்!. அதில் கவிழ்ந்த படகாய் தமிழகம் தத்தளிக்கிறது!. தடுமாறுகிறது!.
அதனைக் கரை சேர்க்கும் வல்லமை கழகத்திற்க்கு உண்டென நம்புவீர்!.
பொழுதுக்கொரு பொய்---வேளைக்கொரு புளுகு. இப்படித்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களைஏமாற்றுகிறார்கள்!.
இனியும் ஏமாறத்தாயாராக இருக்கிறதா தமிழ் இனம்?. இதுதான் எங்கள் கேள்வி!.

இதே கேள்வியைத்தான் இப்போது பாமகவினர் மக்களைப் பார்த்து கேட்கிறார்கள்.அடுத்த ஆட்சியைதப்பித்தவறி பாமகவினர் பிடித்துவிட்டால் மேலே உள்ள அறிக்கையின்
படி
மீண்டும் திமுகவினர்தமிழ் இனத்தைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்.
தொந்திரவே இல்லாமல் ஒரே அறிக்கை, எல்லா கட்சியினருக்கும் போதும்!.ஜனங்கள் எப்போதும் போல 'பார்' களில்!. வாழ்க தமிழ் இனம்!....