யார் அந்த ஹீரோ --- மர்மம் தெளிகிறது!

·

ண்ணியடிக்கிறதுன்னா எத்தனையோ சாக்கு போக்கு சொல்லிட்டு ஓடுறதில் நான் பழைய தமிழ்குடி!. நம்ம 'வால் பையன்' மாதிரி.அவராவது கொஞ்சம் சூழ்நிலைய பாப்பாரு!?..
நான் அதிலேயும்மோசம் .சும்மா ஸ்கூலு பெல் அடிச்ச மாதிரி ஓடுவெம்பாருங்க. ஊரே பாக்கும்! ரொம்ப வெக்கமாஇருக்குங்க!.

இன்னிக்கு காலையிலெ இருந்தே ஒரே டென்ஷன் . அதாவதுங்க ஒரு தறிக்காரரரு ஒரு டிசைனை தப்புத்தப்பா ஓட்டிக்கிட்டு வந்து காட்டுனாருங்க. (நீ என்னடா வேலை செய்யுர டுபுக்குன்றீங்களா?நமக்குத் தொழில் இசைத்தல் அங்குற மாதிரி இது நெசத்தல்!) அதுவும் பட்டு
சேலைங்களா... எனக்குசரியான கோவங்க! என்ன ஒன்னா ரெண்டா சும்மா இருக்கிறதக்கு.
அவருகிட்ட சரி செய்ய சொல்லிபேசிப் பேசியே மாஞ்சிபோச்சிங்க. அவரு கேட்டுப்புட்டு
போறப்பவே மணி ஆறாயிப் போய்டுச்சி.

அதுக்கு அப்புறமா வீட்டுக்கு போயி மூஞ்சி கழுவிட்டு வரலாம்முன்னு வீட்டுக்குப் போனங்க.
அப்பதாங்க வந்துச்சிங்க அந்த போனு!.

கரூரிலே இருந்து, நான் முன்ன ஆர்டர் செஞ்ச,அதாவது (ரொம்ப அதாவது இல்லீங்களா?) அப்போ நான் காட்டன் பண்ணிக்கிட்டிருந்தப்போ (சேலத்துல பட்டு,காட்டன்,பாலியெஸ்ட்டர்
எல்லாம் பண்ணு வாங்க) நான் ஆர்டர் செஞ்ச ஆபிசில் வேலை செஞ்சவங்க.அதுல ஒருத்தர்
ரொம்ப நண்பர் போன்செஞ்சார்.'நான் இப்போ சேலத்துலதான் இருக்கிறேன். உங்க கிட்ட
பேசணுமே வர்ரிங்களா?'.. ன்னார்.அதுக்கு அர்த்தமே டேய் என் வேலை முடிஞ்சுபோச்சி இப்போ நான் ஊருக்குப் போறேன்.தண்ணியடிக்க வர்றியா?.

(இது 'இளைய கவி' இல்லை. அவர் குடிப்பதே இல்லன்னு தேவி ஜக்கம்மா மீது சத்தியம் செஞ்சுநல்ல பாதையில் போயி அங்கு சரியான படி செல் டவர் கிடைக்க வில்லை என்று
பீர் மட்டும் குடிப்பேன் என்ற குடி பாதையில் திரும்பி, வரும் வழியில் குறுக்குப்பாதையில்
வோட்கா வாங்கி வந்து தனிப்பாதையில் ஒரு குவார்டரை ஒரே கட்டிங்கில் இழுத்துவிட்டு, சீரியஸ்ஸாக,கரூர்செல்வதாக கூறிவிட்டு, ஈரோடு பஸ்ஸில் ஏறி நமக்கு சிரித்துக் கொண்டே
டாடா காண்பிக்கும் போது எனக்குகானா காலங்கள் 'ப்ளாக் பாண்டி','புலி' ஞாபகம் ஏனோ வந்தது..
இளைய கவி ... தயை கூர்ந்து மன்னிக்கவும்...)
இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.போன் வந்ததும் பல சாக்குகளை வீட்டில் சொல்லி
விட்டு,நான் தான் சந்துலசாக்கு போக்கு தெடற ஆள் ஆச்சே!. நரசுஸ் காபி போல சுடசுட ஆவி பறக்க பறந்தேன்!.
என்னடா இவன் 6 மணிக்கே போகின்றான் என எண்ணாதீர்கள்.கூப்பிட்ட நண்பன் 9 மணிக்கே வீட்டிற்க்குபோக வேண்டுமாம்!.நான் எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன!.அவனுடைய வீட்டில்
அவன் ரொம்ம்ம்ப! .....நல்லவனாம்!.தண்ணி அடிச்ச கதை இப்ப வேணாம்!.
அதப் பத்தி பேசுறத்துக்கு நான் இதை எழுதவில்லையே!.அதனால் இந்த மேட்டரு இப்போ இப்போதைக்கு முடியுது.

பின்னாடி எழுதறப்போது பாப்போம்!

வீட்டிற்கு வரும் போதே லேசான தடுமாற்றம் இருந்தது.வீடு மாடியில்,எனவே பெல் அடித்தவுடன் சாவி மேலே இருந்து ஒரு பை மூலம் கீழே வந்தது.கதவைத் திறந்து படி ஏறும்
போதே,கால்கள்முன்னும் பின்னும் சாமியாடியது.தண்ணீரில்இருந்து தரைக்கு வந்த சிறு வாத்தைப் போல மெல்ல தத்தித் தத்தி நடந்தேன்.
படியின் ஒரு பக்கமுள்ள,ஏணியை பக்கவாட்டில் நிறுத்தி வைத்ததை போல் இருந்த, இரும்பு கைப்பிடியை கொடி போல தழுவினேன்.எம்ஜிஆரின் அரசகட்டளைப் படத்தில் வந்தபாட்டுப் போல ஆடி வா.. ஆடி வா .. ஆடி வா! என்று கொடியைப் பிடித்துக் கொண்டு பாட வில்லை,
மாறக,ஆடாமல் போ...ஆடாமல் போ... ஆடாமல் போ, என்று என்னை நானே எச்சரித்துக்
கொண்டு மாடிக் கைப்பிடிக் கொடியில் ஊஞ்சல் ஆடியபடியே ஏறினேன்.
ஏறும் போதே மாடியில் இருந்து டமால்,டுமீல்ன்னு சத்தம் வந்து கொண்டு இருந்தது.
பயப்படாதிங்க!.விஷயம் என்னன்னா?

வீட்டுக்கு வரும்போது HBO வில ஒரு படம் ஓடிக்கிட்டிருந்துச்சி. என்ன படம்....,பாருங்க, ரொம்ப நேரம் கழிச்சி எழுதுறதுனாலெபடம் பேரு சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேன்னுது.
ஆங்.. தி மாஸ்க் ன்ற படம் .அதில நடிச்ச ஹீரோ பேரு என்னான்னு என் ஊட்ல கேக்க ,
அந்தக் கொடுமையப் பாருங்க, சட்டன்னு சுவிட்சஆப் பண்ணாப்புல அந்த ஹீரோ பேரு மறந்து போயிடுச்சி!.அடக் கொடுமையே இப்பிடி கூட ஆவுமான்னு நான் அவர் பேரையோசனை
பண்ண ஆரம்பிச்சேன்.மப்பால மறந்து போன மாதிரி தெரியக்கூடாதுன்னுட்டு,இல்லேன்னா ஒவர் தண்ணீன்னுதெரிஞ்சிடும்.அதனால யோசனைப் பண்ற மாதிரி தெரிஞ்ச இங்கிலீசு பட நடிகர் பேரயெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன்.

டாம் குருஸா, இல்லியே, அர்நால்டா.. அட அவரு என்னா பாடி!. ராபின் வில்லியம்ஸா.. ம் ஹும் அவரில்லையே பேருக்குள்ளெ கே மாதிரி ஒரு எழுத்து வருமே!.கிரி கிரி பெக்கா அவரு பழைய நடிகராச்சே!. இப்பிடி நான் என்ன தின்னேன்னு தெரியாமயேகை கழுவினேன்.
என் ஊட்டுக்காரம்மா என்னை சிந்தனைக் கடல்ல,தள்ளி விட்டுடு நான் தத்தளிக்கிறது தெரியாம அப்புராணியா தூங்கிட்டாப்புல!.நான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவே
இல்லை.ஒரு மணியிருக்கும், பளிச்சுன்னு மூளைக்குள்ளெ யாரோ டார்ச் லைட் அடிச்ச மாதிரி
ஒரு வெளிச்சம்!. அட கேரி... என்னா கேரிஆங் ... ஜின் கேரி சீச்சீ ஜின் இல்ல ..ஜிம் கேரி.

அப்பாடா இப்பத்தான் மக்களே நிம்மதியாச்சு!.தண்ணி அடிக்கும் போது முதல்
ரவுண்டில சும்மா குப்புன்னு இருக்கும்.அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ரவுண்டு அடிக்கும் போது ஒரு தெளிவுகிடைக்கும். அந்த மாதிரி ஒரு தெளிவு, இப்ப கிடைச்சப்புறம் தான் எனக்கு தூக்கமே வந்துச்சு!



15 comments:

Anonymous said...
 

வேற விஷயத்தை எதிர்பார்த்தேன்
சப் என்றாகி விட்டது
:P

துளசி கோபால் said...
 

குடைச்சல் சரியாச்சு:-))))))


பட்டு டிசைனை இங்கே 'பட்'னு போடவேண்டியதுதானே?

இத்துப்போன ரீல் said...
 

பட்டு டிசைனைப் போட்டா போச்சு.
ஆனா பாட்டிலைப் போட்டா போயே
போச்சு!

வால்பையன் said...
 

எனக்கென்னவோ நீங்க தான் இளைய கவின்னு சந்தேகமா இருக்கு
(ஒருவேளை போலி இளைய கவியா)
என்னையும் மனுசனா மதிச்சி அழைப்பு விடுத்ததற்கு நன்றி

வால்பையன்

இத்துப்போன ரீல் said...
 

//எனக்கென்னவோ நீங்க தான் இளைய கவின்னு சந்தேகமா இருக்கு//

இல்லை நண்பரே!. நீங்கள் முயற்ச்சி
செய்யுங்கள் என்பதால் எழுதவந்தவன்!

இத்துப்போன ரீல் said...
 

//இல்லை நண்பரே!. நீங்கள் முயற்ச்சி
செய்யுங்கள் என்பதால் எழுதவந்தவன்!//

மன்னிக்கவும். என்பதால் என்பதை
என்றதால் என்று திருத்திக் கொள்க!

Udhayakumar said...
 

நீங்க ஈரோடுங்களா? நானும் உங்க மாவட்டந்தான் (பெருந்துறை வட்டம்). தறின்னு வேற சொல்லிட்டீங்க, நானும் வீட்டில் நெய்திருக்கிறேன்...கொசுவர்த்தி சுத்தி பழசை நினைக்க வைச்சிட்டீங்களே??? ஊர்க்காரங்களை வலையில பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு :-)

இத்துப்போன ரீல் said...
 

//நீங்க ஈரோடுங்களா? நானும் உங்க மாவட்டந்தான் (பெருந்துறை வட்டம்).//
இல்லீங்க உதயகுமார்.நான் பக்கத்தில
சேலமுங்க.நன்றிங்க.

வால்பையன் said...
 

கண்டுபிடிச்டேன்!!
முதலில் உங்கள் எழுத்து மிக இளமையாக இருந்ததால் என்னால் உங்களை அங்கே கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

உங்களுக்குள் இவ்வளவு நகைசுவை உணர்வா! அன்று பயங்கர சீரியஸாக இருந்தீர்கள்!!

ஈரோடு வந்தால் என்னை அழைக்கவும்!
இங்கே ஒரு பதிவர் சந்திப்பு வைக்கும் யோசனை இருக்கிறது.

வால்பையன்

இத்துப்போன ரீல் said...
 

நன்றி "வால் பையன்" அவர்களே
உங்களுடய பின்னூட்டம் எனக்கு மிக
ஊட்டமாக இருக்கிறது!நீங்கள் ஊக்கமளித்திராவிட்டால் நான் எழுத முயற்சித்திருப்பது சந்தேகமே!
ஈரோடு வரும் போது நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.பதிவர் சந்திப்பு
நாள் முடிவானவுடன், சொல்லவும்.

நல்லதந்தி said...
 

write more it is interesting.......

நல்லதந்தி said...
 

write more it is interesting.......

சென்ஷி said...
 

:)))

நல்லதந்தி said...
 

:))) :))) :D

Anonymous said...
 

where have u gone ?why are u not writing ......