சோனியா அரசியலுக்கு வரக்கூடாது..ராஜீவ்காந்தி!

·

வருடைய பேரே நமக்கு குழப்பம்!

தென்னாட்டவர்கள் சொல்வது போல் இராஜீவ் அல்லது வடநாட்டவர்கள் சொல்வது போல் ரஜிவ் காந்தி .அவருடைய ஆவியுடன்! பேசும் போது அவர் ஆவியாக?! சொன்ன தகவல்.

குமுதம் இதழில், 1996-ம் ஆண்டு அதிமுக வுடன் தேர்தலில் கூட்டு சேரலாமா கூட்டு சேரக்கூடதா என்று காங்கிரஸ் பேரியக்கம்!!!!!!(என்ன கொடுமை சரவணன் இது). முக்கிக்கொண்டிருக்கும் போது ஸ்கூப்பிற்க்காக குமுதம் ஆவி மீடியேட்டரை பிடிச்சி போட்ட நியூஸ் இது!.
ஒரே ஒரு பிட்டுத்தான்! படியுங்கள்!.

கேள்வி: சோனியா காந்தி,பிரியங்கா,அரசியலுக்கு வருவதை நீங்கள் விரும்புகிறீர்களா?.

பதில்: (......ஹூஊஊஊஉ......பயப்படாதீர்கள்..இது ராஜீவ் ஆவி)
நிச்சயமாக விரும்பவில்லை!.

கேள்வி: ஏன் வரக்கூடாது,அவர்கள் உங்களுடைய எண்ணங்களை,கனவுகளை நன்கு அறிந்தவர்கள்,அவர்கள் வந்து அவற்றை நிறைவேற்ற முடியுமே?

பதில்: (மறுபடியும் ராஜீவ் ஆவி)
இந்த அரசியல் சகதியில் என் குடும்பத்தினர் எவருமே ஈடுபடுவதை நான் சுத்தமாக விரும்பவில்லை!.அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்கத்தான் நான் விரும்புகிறேன்!.

அடுத்தது இம்மாதிரியே கேள்விகள் வந்தன... போயின..

ஆனால் ராஜீவ்வின் ஆசையை சொந்த மனைவியே கண்டுகொள்ளவில்லை. அப்புறம் என்னா வெங்காயத்துக்கு நாங்கெல்லாம் கண்டுகொள்ளனும்.எல்லா காங்கிரஸ்காரர்களும் என்ன முடிவு செஞ்சாஞ்கண்ணு தான் நாமெல்லாம் பார்த்தோமே!
ராஜீவ்வை ("வ்" போடனுமா? கூடாதா? )மதிப்பவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்!.
கெட்டதிற்க்கு எதிர்ப்பதம் நல்லது என்பது நமக்குத் தெரியாதா?

4 comments:

Anonymous said...
 

சோனியாவும் நம்நாட்டைக் காப்பாற்ற முடியாதென்றால் 100 கோடி மக்களும் தற்கொலை செய்து கொள்ளலாமா?.இதங்காட்டிலும் பழைய பிரிட்டிஷ் முதலாளிங்க கிட்ட அடிமை வாழ்க்கையை தொடர்ந்திருந்தால் அதிக முன்னனுபவதிற்க்காக சம்பளமாவது சேர்த்தி கிடைக்குமே.சுதந்திரத்திற்க்காக பட்ட எல்லா கொடுமைகளும் அனுபவிக்காமலே இருந்து இருக்கலாமே!.ஆனால் சுதந்திரதால் பலனடந்தது நேரு குடும்பம் மட்ட்டுமே!

Unknown said...
 

வெளிநாட்டில் பிறந்து, அந்தக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், இந்தியாவில் எந்த அரசியல் பதவியையும் வகிக்க முடியாது - இப்படி ஒரு சட்டம் போடுவதில் நமது மத்திய அரசியல் வாதிகளுக்கு என்ன தயக்கம் என்பதுதான் தெரியவில்லை. மானங்கெட்ட இந்தியர்கள், அடிமையாய் இருப்பதை பெருமையாய் நினைப்பதை விட, நாக்கைப் பிடுங்கிகிட்டு சாகலாம்..

இத்துப்போன ரீல் said...
 

இந்தியர்கள், தங்களை தாங்களே ஆண்டு கொள்ள தகுதியும்,திறமையும் அற்றவர்கள் என்று சர்ச்சில் கருதி இந்தியர்களுக்கு சுதந்திரம் வழங்கக்கூடாது என சுதந்திரத்திற்க்கு தடையாக இருந்தார்.அப்போது இந்த துவேஷப் பேச்சிற்கு காங்கிரசார் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.இப்போது அவர்களே இந்தியர்களுக்கு,எந்த தகுதியும், திறமை இல்லை என ஒப்புக் கொண்டு அரசியலில் குதிக்க தயங்கிய சோனியாவின் காலைப்பிடித்து கெஞ்சி அழைத்து வந்தனர்.தவறு சோனியாவினுடையது அல்ல.நம்முடைய பாழாய்போன பதவி வெறிபிடித்த சுயநல அரசியல் வாதிகளுடையது.

Anonymous said...
 

:D