மதுக்கடைகளை ஒழிப்போம்---- திமுக

· 4 comments

சென்னை: ‘மதுபானக் கடைகளை மூடினால், கள்ளச் சாராயம் தமிழகத்தில் ஆறாக ஓடும். அதனால், லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும்’ என்று சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த பொது விவாதம்:
எதிரொலி மணியன் (பா.ம.க.,): தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் குடிக் கின்றனர். வாழ்வுக்கும் குடிக்கின்றனர்; சாவுக்கும் குடிக்கின்றனர். வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்ற நிலை உள்ளது. இந்த ஆண்டு ‘டாஸ்மாக்’ வருமானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானம். எங்களைப் பொறுத்தவரை அது பெண்களின் கண்ணீரில் கிடைக்கும் வருமானம். அ.தி.மு.க.,வும்-தி.மு.க., வும் போட்டி போட்டுக் கொண்டு மதுக் கடைகளை திறந்துள்ளன.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: ஒருவரை பகைத்துக் கொண்டால் பரவாயில்லை. இரண்டு தரப்பையும் பகைத்துக் கொண்டால், நீங்கள் எங்கு நிற்பீர்கள்?
அமைச்சர் எ.வ.வேலு: தமிழகத் தைச் சுற்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மது விற் பனை நடக்கிறது. முன்பு சனி, ஞாயிறு கிழமைகளில் புதுச்சேரியிலும், பெங்களூருவிலும் உள்ள ‘பார்’கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். அப்படி வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்தது. அதை தடுக்கத் தான் இங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
எதிரொலி மணியன்: மகாராஷ்டிராவில் படிப்படியாக மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள் ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என பாட்டிலில் போட்டு விட்டு, அரசே அதை விற்கிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மது விலக்கை தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால் சரியாக இருக் காது. இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் விற்கலாம். தமிழகத்தில் மட் டும் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும். லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த காரணத்தைக் கூறித் தான் எம்.ஜி.ஆர்., மது விற்பனையை கொண்டு வந்தார். அதே கருத்தை தான் இந்த அரசும் கொண்டுள்ளது.
வேல்முருகன் (பா.ம.க.,): போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு கடுமையாக உத்தரவு போட்டு, கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆற்காடு வீராசாமி: ‘டாஸ் மாக்’ கடைகள் இருப்பதால் தான் தமிழகத்தில் கள்ளச் சாராயம் இல்லை. மூடி விட்டால், சாராயம் ஆறாக ஓடும். மத்தியில் அமைச்சராக உள்ள அன்புமணியிடம் கூறி, பிரதமரிடமும் சோனியாவிடமும் பேசி, இந்தியா முழுக்க மது விலக்கை அமல் படுத்துமாறு வலியுறுத் தச் சொல்லுங்கள். அப்படி நடந் தால், இங்கும் மது விலக்கை அமல்படுத்த தயார்.
எதிரொலி மணியன்: மூன்று கி.மீ., க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்று கேட்டால் விதிமுறைகளை காட்டுகிறீர்கள். ஆனால், மதுக் கடைகளை மட்டும் மூன்று கி.மீ.,க்கு ஒன்று திறப்பதற்கு எப்படி வசதி வந்தது? இவ்வாறு விவாதம் நடந்தது.


நன்றி : தினமலர்


மேலே உள்ள செய்தியைப் படித்தீர்களா?.
இப்போது அடியில் காணும் அறிக்கையைப் படியுங்கள்!. இவ்விரண்டும் ஒரே கட்சியின் statement.என்னமுதலில் உள்ளது ஆளுங்கட்சியாக இருக்கும் போது உள்ள நிலை!.

கீழே உள்ளது எதிர்கட்சியாக இருந்த போது இருந்த நிலை!.எத்தனை முரண்பாடு, இந்த இரண்டிற்க்கும் என்று, நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

1984-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக வின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி.

துபானகடைகளைத் திறந்து இதன் காரணமாகக் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுவருவதை நாட்டு மக்கள் நன்குஅறிவர்.
நாங்கள் இந்த நாற்றமெடுத்துக் கிடக்கும் சாராய சாம்ராஜ்யத்திற்க்கு முடிவு கட்டியே தீருவோம் என்று உறுதி கூறுகிறோம்.
கழக ஆட்சியில் கடுகளவு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றைத் திருத்திக்கொள்ள நாங்கள்தவறியதே இல்லை.
இன்றோ கடலளவு தவறுகள்!. அதில் கவிழ்ந்த படகாய் தமிழகம் தத்தளிக்கிறது!. தடுமாறுகிறது!.
அதனைக் கரை சேர்க்கும் வல்லமை கழகத்திற்க்கு உண்டென நம்புவீர்!.
பொழுதுக்கொரு பொய்---வேளைக்கொரு புளுகு. இப்படித்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களைஏமாற்றுகிறார்கள்!.
இனியும் ஏமாறத்தாயாராக இருக்கிறதா தமிழ் இனம்?. இதுதான் எங்கள் கேள்வி!.

இதே கேள்வியைத்தான் இப்போது பாமகவினர் மக்களைப் பார்த்து கேட்கிறார்கள்.அடுத்த ஆட்சியைதப்பித்தவறி பாமகவினர் பிடித்துவிட்டால் மேலே உள்ள அறிக்கையின்
படி
மீண்டும் திமுகவினர்தமிழ் இனத்தைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்.
தொந்திரவே இல்லாமல் ஒரே அறிக்கை, எல்லா கட்சியினருக்கும் போதும்!.ஜனங்கள் எப்போதும் போல 'பார்' களில்!. வாழ்க தமிழ் இனம்!....

குஷ்வந்த்சிங்,சு.சுவாமி சொன்னது நடந்ததா?

· 2 comments

நீங்கள் ஜோதிடம் பார்க்க போயிற்க்கிறீர்களா?....

அங்கே ஜோதிடம் பார்த்தவர்களைக் என்னாச்சி! என்று கேட்டால் ரெண்டு வருஷம் கழிச்சி நல்லாஇருக்கும் என்று சொன்னார்!. என்று சொல்வார்கள்.இரண்டு வருடம் கழித்து யார் ஜோதிடரைப்பார்த்து நீங்கள் சொன்னமாதிரி நடக்கவில்லையே என்று யாரும் கேட்பதில்லை!.இந்த செளகரியத்தைவைத்தே அவர்களும் காலத்தை ஓட்டி விடுகிறார்கள். நான் எல்லா ஜோதிடர்களையும் சொல்லமாட்டேன்.ஒரு சிலர் அல்லது பலர் இருக்கலாம்.அதைப் பற்றி விரிவாக பேச இது இடம் இல்லை.ஆனால் ஒருவர் சொன்ன விஷயம் பலவருடங்கள் கழித்து நடந்ததா? இல்லை, நடக்க வில்லையா?என்பது நமக்கே தெரியும்!.
அந்த மாதிரி சிலர் சொன்ன விஷயம் நடந்ததா?. என்று நாமே பார்க்கலாமே!?.

1982-ல் சிலர் சொன்னது எது,எது நடந்து இருக்கிறது என்று பார்ப்போமா!.(இதில் குஷ்வந்த் சிங்,மற்றும் சுப்ரமண்யசுவாமி இருவர் சொன்னதை மட்டும் பார்ப்போம்)
1982-ன் இறுதியில் கல்கண்டில் வந்த கட்டுரை இது!.

கி.பி. 2001இல் அதாவது இன்னும் பதினெட்டு வருஷங்கள் கழித்து நீங்கள் எப்படி இருப்பீர்கள்!.உலகில் என்ன முன்னேற்றம் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று பெரும்புள்ளிகளைக்கேட்டபோது அவர்கள்சொன்ன பதில் இவை:
குஷ்வந்த் சிங்:
மேற்கு நாடுகளில் பத்திரிக்கை இன்று எப்படி இருக்கின்றனவோ அப்படி நமது இந்திய பத்திரிக்கைகள் இருக்கும் (நடந்தது). அமெரிக்கா போன்ற நாடுகளில் டெலிவிஷன் பெற்றுள்ள நவீனத்துத்தைநம் நாட்டு டி.வி.க்கள் பெற்றுவிடும். அரசின் டி.வி.ரேடியோ ஆதிக்கம் ஒழிந்து பல தனியார்கம்பனிகள் டி.வி. நிகழ்ச்சிகளை நடத்தும்.(நடக்கிறது).எகிப்திய அதிபர் சாதாத் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை அமெரிக்க டெலிவிஷனில் நிகழ்ச்சி நடந்த பத்தாவது நிமிடத்திலேயே ஒளி பரப்பினார்கள்.அது போலச் செய்திகள் வேகமாகப் பரவ சாட்டிலைட்டுகள் உதவியுடன் டெலிவிஷன் பணி செய்யும்.(நடக்கிறது).எதாவது இரு நாடுகளுக்குள் எப்படியும் ஒரு பயங்கர போர் மூளுவதற்க்கான வாய்ப்புஉள்ளது.இதனால் உலகின் பெரும் பகுதி அழிந்து விடலாம் என்று தோன்றுகிறது.மற்றபடி பெரும்விஞ்ஞான முன்னேற்றங்கள் நம் நாட்டிலும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!.

சுப்ரமணியசுவாமி:
2001-இல் எல்லாமே பட்டனைத்தட்டினால் உடனே நடந்து விடும் என்ற அளவில் இருக்கும்.உதாரணமாக மாநாடு, செயற்க்குழு கூட்டம் எல்லாம் இல்லாமல் தனியாக கூட்டம் நடத்திவிடலாம்.அவரவர் அறையில் உட்கார்ந்த படியே மகாநாடு கூட நடத்தி விடலாம்.(நடக்கிறது வேறு விஷயங்களில்)பெட்ரோலிற்க்கு பதிலாக வேறு ஒரு சக்தியை 2001-ல் கண்டு பிடித்து விடுவார்கள்.மின்சாரக்கார்கள்தெருவினில் சுற்றும்.விண்வெளியிலும் ஏகப்பட்ட விந்தைகளைக்கணலாம்.எதையும் சுருக்குவது(Minimze)என்றமுறை வழக்கத்தில் இருக்கும்.(நடந்து கொண்டே இருக்கிறது)இரசாயனம் மற்றும் மின்சாரத்துறைகளில் பெரும் முன்னேற்றம் இருக்கும்.அரசியல் ரீதியாக இந்தியா ஒரு வலுவான செல்வாக்கான நாடாகமாறும்.ரஷ்யா,சீனா இரண்டும் கம்யூனிசத்தைக் கைவிட்டு விடும்.(ஒன்றில் நடந்தது).தனிப்பட்டவரிகளின்சுதந்திரம் வலுப்பெறும்.சிறு அணுஆயுதப்போர்கள் நடை பெறும்.




ரஜினிகாந்திற்க்கு நீதிபதி அபராதம்!

· 5 comments

தென்ன கலாட்டா என்கிறீர்களா?அல்லது நில பத்திரபதிவு பிரச்சனை மேட்டரா? என்று குழப்ப மடையாதீர்கள்.இது பழைய விஷயம்.சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையில்ஒரு கரிய சம்பவம்!.

மூக்குத்தி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.


இந்த பத்திரிக்கையை இப்போதைய சத்தியபாமா பொறியியல் கல்லூரியின் நிறுவனர் திரு.ஜேப்பியார் நடத்தி வந்தார்.இது கிட்டத்தட்ட N.S.கிருஷ்ணன் காலத்திய"இந்து நேசன்" போன்றது.இதனுடைய நிருபர் திரு.ஜெயமணி என்பவர்.ரஜினியைப் பற்றி ஒரு தவறான
தகவலை எழுதவே (அது தவறான தகவலோ அல்லது நிஜமானதோ நமக்குத்தெரியாது! ஏனென்றால் அப்போது மன அழுத்தத்தால் ரஜினியின் நடவடிக்கைகள் வித்தியாசமானதாகவே இருந்தன!.அவரை மெண்டல் என்றே அந்தக்கால கிசுகிசுவில் குறிப்பிடுவார்கள்!.மேற்படி
கிசுகிசுவைப் படித்து என் அண்ணன் ரஜினியை மெண்ட்டல் என்றே குறிப்பிடுவான்.
இதனால் ரஜினி ரசிகனான எனக்கும் கமல் ரசிகனான என்அண்ணனுக்கும், இதனால் அடிதடி அடிக்கடி நடக்கும்). தில் இருவருக்கும் ஏற்பட்ட ராசாபாசத்தில் அது கோர்ட் வரைக்கும்
சென்றது.(இதில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டார்கள் என்றோ, ரஜினி ஜெயமணி
மீது காரை ஏற்ற முயன்றதாகவோ ஒரு வதந்தி பத்திரிக்கைகளில் வந்தது).


கோர்ட்டில் ரஜினிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.ரஜினி பிரச்சனை போதும் என்று குற்றத்தை
ஒப்புக்கொண்டு மேற்படி மேட்டரை முடித்துக்கொண்டார்!. அது சம்பந்தமான செய்தி இது.

1979-ல் மூக்குத்தியில் வெளிவந்தது.படியுங்கள் சுவாரஸ்சியமான விஷயத்தை!.



ஜினி மீது 'மூக்குத்தி' சினிமா நிருபர் தொடுத்த வழக்கு முடிந்து விட்டது.
குற்றங்களை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டதன் பேரில் ரூ 1,500- அபராதம் விதித்து நீதிபதி
தீர்ப்பு கூறி உள்ளார்.


இந்த வழக்கினை மேற்க்கொண்டு நடத்தாமல் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வி
கண்டன.சட்டம் தனது கடமையைச் செய்திருக்கின்றது.

இந்த தீர்ப்பில் ரஜினிக்கும் முழுத்திருப்தி!.

" இப்போதுதான் எனக்கு நிம்மதி..... இனிமேல் நான் புது மனிதன் " என்று பெருமிதத்தோடு
கூறினார் ரஜினி.


படப்பிடிப்புகளுக்கு குறித்த நேரத்தில் போகிறார்.
தயாரிப்பாளருக்கு கொடுத்த கால்ஷீட்களை ஒழுங்காக முடித்துக்கொடுத்து ஒத்துழைப்புக்
கொடுக்கிறார்.



படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் சக ஊழியர்களை அழைத்து வைத்துக்கொண்டு அரட்டை
அடித்து கலகலப்பூட்டுகிறார்.


இந்தமாற்றங்கள் அவர் பெற்றதற்க்கு மூக்குத்தியும் ஒரு காரணம் என்று இப்போதும்
நினைவுட்டுகிறோம்!














ஒரே படம்!

· 0 comments

பாகிஸ்த்தானில் மட்டும் அரசியல், பார்த்த சினிமாவையே மீண்டும்மீண்டும் பார்ப்பது போல, பார்த்த காட்சிகளே திரும்பதிரும்ப அரங்கேறுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சியை தற்போது மீண்டும் பாகிஸ்த்தான்மக்கள் பார்க்கிறார்கள்.1969-ல் குமுதத்தில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைப்படியுங்கள். நீங்கள் மாற்ற வேண்டியது 'அயூப்கான்' என்று வரும் இடத்தில்'முஷாரஃப்' என்று படிக்க வேண்டியது மட்டுமே!


பாவம், அயூப்கான்!.
அஸ்தமனம் என்பது எல்லோருக்கும் உண்டுதான்.ஆனாலும்,தளபதியாக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த இந்த பாகிஸ்த்தான் தலைவரின் அரசியல் வாழ்க்கை இப்படிப்பொசுக்கென்றா முடிய வேண்டும்?. பரிதாபத்திற்க்குரிய விஷயம்.


ஊழல்பிடித்த அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து அன்று மக்களை அவர் மீட்டார்.இன்றோ,அவரது பிடியில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள மக்கள் ஒரு புரட்சியே செய்து விட்டார்கள். விளைவு? சட்டத்தின் உயிர் ஊசலாட ஆரம்பித்தது.ஒழுங்குக்கு மூச்சுத் திணறலாயிற்று.

எந்த நாட்டிலுமே,வன்முறையை வன்முறையால்தான் ஒடுக்க முடியும் என்ற நெருக்கடியானகட்டம் வரும்போது, ‘கைவரிசையைக் காட்டுங்கள்' என்று இராணுவத்திற்க்கு கட்டளைஇடப்படுவது உண்டு.

இராணுவத்திற்க்கு அயூப்கான் கட்டளை இடவில்லை.அதனிடம் சரணாகதி ஆகிவிட்டார்.‘துணைக்கு வாருங்கள்' என்று அவர் தற்போதைய தளபதி யாஹ்யாகானைக் கூப்பிடுவதோடுநிறுத்திக் கொள்ளவில்லை.தூக்கியே கொடுத்துவிட்டார் ஆட்சிப்பொறுப்பை.

இப்போது பாகிஸ்த்தானில் அமைதி நிலவுகிறது என்றால் அதற்க்கு ஒரே காரணம்தான்இருக்க முடியும்.துப்பாக்கி அங்கே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்த்தானிய மக்கள் அயூப்கானுக்கு எதிராகப் பொங்கியது ஏன்?

நன்றி: குமுதம்



நான் அவனில்லை -பழசு- விமர்சனம்

· 1 comments

நான் அவனில்லை : விமரிசனம்
இது புதிய படத்தின் விமரிசனம் அல்ல!.1974-ல் வெளிவந்த ஜெமினி நடித்த K.பாலசந்தரின்படம். புதிய படத்தைவிட பழைய படம் நன்றாக இருந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம்.வெளி வந்த காலத்தில் எப்படி ரசித்தார்கள் என்று அக்காலத்திய விமரிசனத்தில் இருந்துதெரிந்த்து கொள்ளலாம்.ராணியில் வந்த விமரிசனம் இது.
க்கள் மக்களுக்காக மக்களே அமைத்துக்கொள்ளும் குடியரசு போல, ஜெமினிகணேசன்,ஜெமிணிகணேசனுக்காக,ஜெமினிகணேசனே தயரித்த படம்,”நான் அவனில்லை”!
ஆம்”டைட்டி”லில் இருந்து கடைசி வரை ஜெமினிகணேசன்தான்!.அவர் 9 வேடம் ஏற்றுநடிக்கிறார்.நாம் எத்தனையோ தச அவதாரங்களை-திகம்பரசாமியார்களைப் பார்த்திருக்கிறோம்ஆனால்,அவற்றுக்கும் இவற்றுக்கும் பெரிய வேறுபாடு உண்டு.ஜெமினிகணேசன் 9 மொழி பெசுகிறார்!.ஒவ்வொரு மொழியையும் அதற்க்கே உரிய ஒலியுடன்அழகாக பேசுகிறார்.இது,இதுவரை யாருமே செய்யாத சாதனை.
ஒவ்வொரு வேடத்திலும் தனது திறமையைக் காட்டுகிறார்.நாஞ்சில் நம்பி எவ்வளவு அப்பாவியாகஇருக்கிறார்!.சாரி முதல் சாமியார் வரை எல்லா வேடத்தையும் கச்சிதமாக செய்கிறார்.
லட்சுமிக்கு சிறு பாத்திரம் என்றாலும்,நினைவில் நிற்க்கும் படி செய்திருக்கிறார்.அவரது அலட்சியநடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது.
செந்தாமரை,கமலஹாசன்,பூர்ணம் விசுவநாதன்,அசோகன்,தேங்காய் சீனிவாசன்,ஜெயசுதா,ஜெயபாரதி,எம்.என்.ராஜம்,ராஜசுலோசனா,பி.ஆர்.வரலட்சுமி,காந்திமதி,அச்சச்சோ சித்ராஆகியவர்களும் நடித்து இருக்கிறார்கள்.
பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன.
திரைக்கதை,வசனம்,டைரக்டர் பொறுப்புகளை கே.பாலசந்தர் எற்றிருக்கிறார்.கதையை முழுக்கமுழுக்க பின்னணிக்காட்சியாக காட்டுவது நல்ல புதுமை.”முசோ”விற்க்கு அகராதியில் பொருள்தேடுவதும்,கைப்பையும் தொப்பியும் இணைவதும் ரசிக்கத்தக்க காட்சிகள். வெளிப்புறக் காட்சிமுழுவதையும் ஒரே ஆற்றங்கரையில் ப்டமாக்கியிருப்பதைத் தவிர்த்து இருக்கலாம்.கொடைக்கானலைக்கூட மைசூரிலேயே படமாக்கியுரிக்கிறார்களே!
வரவேற்க்கத்தக்க புதிய - மாறுதலான முயற்சி!
நன்றி: ராணி

சாதல் இல்லையேல் காதல்

· 3 comments

படித்தாலே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை 'சோ'அவர்களுடையது. அவர் எழுதிய 'சாதல் இல்லையேல் காதல்' நாடகத்தில் இருந்து ஒரு பகுதி.1965ல் கல்கியில் வெளிவந்தது.படித்துவயிறு குலுங்க நீங்களும் சிரியுங்கள்!இதைப் படிக்கும் போது ‘பொம்மலாட்டம்','நினைவில் நின்றவள்' போன்ற படங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
காட்சி : இதை வீடு என்பதைவிட,மாளிகை என்று அழைப்பதே பொருந்தும்.பம்பாயில்சாதாரணமாக இம்மாதிரியான வீடுகளில் குறைந்தது ஐம்பது குடும்பங்களாவது வசிக்கலாம்.ஆனால் இந்த வீட்டிலோ சபேசன் ஒருவர் மட்டுமே வாழ்கிறார்.வீடுகளைப் புறாக் கூண்டுகள்போலகட்டி,கிடைத்தபொந்துகளிலெல்லாம் பல குடும்பங்கள் வாழ்கின்ற பம்பாய் நகரத்தில் இம்மாதிரி ஒரு சில மாளிகைகளில்,ஒரு சில மனிதர்கள் மட்டுமே வாழும் விந்தையை பார்க்கிறோம்.சபேசன் தமது அறையில் ஒரு பலகையை ஸ்டாண்டில் சாய்த்து நிற்க வைத்து, சித்திரம் வரைந்துகொண்டிருக்கிறார்.இது அவருடைய பொழுதுபோக்கு. அறைக்குள் சுரேஷ் நுழைகிறான்.
சுரே: பிரமாதம் சார்! பிரமாதம்!
சபே: யாரு? நீயா?
சுரே: ஆமாம் சார், நான்தான்.
சபே: ஓ! நீதானா?
சுரே: குட் ஈவினிங் சார்!
சபே: குட் ஈவினிங்... ஆமாம் என்ன வேணும்?
சுரே: சார்..!
சபே: இரு இரு.. சுரேஷ்,இந்த படம் எப்படி?
சுரே: பிரமாதம் சார்.
சபே: நல்லா பார்த்து சொல்லு.
சுரே: (பார்க்கிறான்) ஐயோ! ஐயோ!... ஐய்யோ!
சபே: என்ன? என்ன?
சுரே: ரொம்பப் பிரமாதம் ஐயோ!... ஆஹா!
சபே: நிஜமாவா?
சுரே: நிஜம்மா சார்!... சாதாரண விஷயம்.அதை எவ்வளவு அழகா வரைஞ்சிருக்கீங்க...ஒண்ணுமில்லே.. சேற்றிலே இரண்டு எருமைக்கடா குதிக்கிறது.அதை எவ்வளவு அழகா...
சபே: இருய்யா.என்ன விளையாடறியா?
சுரே: ஏன் சார்?
சபே: இது ரெண்டும் எருமைக்கடாவா? (சித்திரத்தைக்காட்டுகிறார்.)
சுரே: இல்லையா? எருமைக்கடாதானே சார்?
சபே: நீதானய்யா எருமைக்கடா.. இது இரண்டு பசங்க... மனுஷங்க!
சுரே: கொம்பு இருக்கே சார்! ஒவ்வொரு தலைக்கும் இரண்டு கொம்புகள் போட்டிருக்கீங்களே?
சபே: எது இது கொம்பா? கர்மம்! இது அந்தபசங்களுடைய கைகள்! ரெண்டு பேரும் கையைஅப்படி வளைச்சுத் தலைக்கு மேலே தூக்கிக்கிட்ட்டு நிக்கிறாங்க...(தாமே அம்மாதிரி வளைத்துக்காட்டுகிறார்)
சுரே: சார்,ப்ளீஸ்! அந்தமாதிரி நிக்காதீங்க. உங்களைப்பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கு...
சபே: சுரேஷ்!உன் தமாஷெல்லாம் நம்ம கிட்ட வேணாம்.ஏனய்யா உனக்கு அறிவு இருக்கா?இதை எப்படி எருமைன்னு சொன்னே!
சுரே: ஆளுக்கு நாலு கால் போட்டிருக்கிங்களே சார்.
சபே: அது கால் இல்லையா! கம்பி! அவுங்க நீச்சல் குளம்-ஸ்விம்மிங் பூல்லே-கம்பிகள்நடுவிலே நிக்கிறாங்க.
சுரே: நீங்க தப்பு பண்ணிட்டிங்க சார்.அவுங்க ஜலத்தில் குதிச்சப் பிறகு நீங்க படத்தைப் போட்டுஇருக்கணும்.வெறும் தண்ணியை மட்டும் போட்டு விட்டு இருக்கலாமே!
சபே: ஷட் அப்!
சுரே: சார், எக்ஸ்க்யூஸ்மீ! ஸ்விம்மிங் பூல்ன்னு சொல்றீங்க... நீச்சல் குளத்திலே ஜலம்ஒண்ணு நீலமா யிருக்கும்,இல்லை கொஞ்சம் பச்சையா இருக்கும்.நீங்க என்ன சார் இப்படிச்சேறு மாதிரி வர்ணத்தைப் பூசி விட்டிருக்கீங்க?
சபே: உனக்கு ஒரு எழவும் புரியாது. நிறையப் பேர் குளிச்சுபுட்டாங்க.. தண்ணி சேறாப் போயிடுச்சி! அத்தனை பேர் இறங்கிக் குளிச்ச பிறகு தண்ணி கிளீனாவா இருக்கும்?
சுரே: ஓ!அப்படியா அது? ஆமாம்... வேறே யாரையும் காணமே?
சபே: (எரிச்சலோடு) உம்...போடறேனய்யா, குளிச்சவங்க அப்பன்,பாட்டன்,பேரன் பேத்தி,எல்லோரையும் போடறேன்யா! யோவ்! உனக்கு 'மாடர்ன் ஆர்ட்'டைப்பத்தி ஒரு எழவும்தெரியாது...
சுரே: ஓ! இதுதான் மாடர்ன் ஆர்ட்டா? அதை முதலிலேயே சொல்லி இருக்ககூடாதா?சார்.நான் ஒண்ணும் சொல்லியே இருக்க மாட்டேனே.. நீங்க ஒண்ணு பண்ணுங்க. இந்தப் படத்தைதலைகீழா மாட்டிடுங்க.
சபே: எனய்யா?
சுரே: மாடர்ன் ஆர்ட் வரையறவுங்க அப்படித்தான் செய்யறாங்க. படத்தை எழுதி தலைகீழாமாட்டிப்பிடுங்க... அதுக்கு ஒரு பேர் மட்டும் நேரா எழுதிடுங்க...
சபே: பேர் மட்டும் நேரா எழுதுவானேன்?
சுரே: படத்துக்கு என்னா பேருன்னு புரியாம போயிடுமே?
சபே: படம் புரியாம இருந்தாப் பரவாயில்லையா?
சுரே: அப்ப்த்தான் அது மாடர்ன் ஆர்ட்?
சபே: இதுக்கு என்னய்யா பேரு வைக்கலாம்?
சுரே: “நீச்செருமைக்குளக்கொம்ப்”
சபே: ஏய்! என்னய்யா இதுக்கு அர்த்தம்?
சுரே: அர்த்தத்தைப் பற்றி நம்க்கென்ன கவலை? பார்க்கிறவங்க அவங்க அவங்க இஷ்டப்படிஅர்த்தம் பண்ணிக்கட்டும்.
சபே: நாலு பேர்கள் பார்த்தா நாலு விதமா அர்த்தம் புரிஞ்சுப்பாங்க.
சுரே: அதுதான் வேண்டியது. உடனே நீங்க பெரிய ஆர்டிஸ்ட் ஆயிடுவீங்க.
சபே: உன்னோட பேசினாலேயே பைத்தியம் பிடிச்சுடுமய்யா.