சென்னை: ‘மதுபானக் கடைகளை மூடினால், கள்ளச் சாராயம் தமிழகத்தில் ஆறாக ஓடும். அதனால், லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும்’ என்று சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த பொது விவாதம்:
எதிரொலி மணியன் (பா.ம.க.,): தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் குடிக் கின்றனர். வாழ்வுக்கும் குடிக்கின்றனர்; சாவுக்கும் குடிக்கின்றனர். வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்ற நிலை உள்ளது. இந்த ஆண்டு ‘டாஸ்மாக்’ வருமானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானம். எங்களைப் பொறுத்தவரை அது பெண்களின் கண்ணீரில் கிடைக்கும் வருமானம். அ.தி.மு.க.,வும்-தி.மு.க., வும் போட்டி போட்டுக் கொண்டு மதுக் கடைகளை திறந்துள்ளன.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: ஒருவரை பகைத்துக் கொண்டால் பரவாயில்லை. இரண்டு தரப்பையும் பகைத்துக் கொண்டால், நீங்கள் எங்கு நிற்பீர்கள்?
அமைச்சர் எ.வ.வேலு: தமிழகத் தைச் சுற்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மது விற் பனை நடக்கிறது. முன்பு சனி, ஞாயிறு கிழமைகளில் புதுச்சேரியிலும், பெங்களூருவிலும் உள்ள ‘பார்’கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். அப்படி வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்தது. அதை தடுக்கத் தான் இங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
எதிரொலி மணியன்: மகாராஷ்டிராவில் படிப்படியாக மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள் ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என பாட்டிலில் போட்டு விட்டு, அரசே அதை விற்கிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மது விலக்கை தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால் சரியாக இருக் காது. இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் விற்கலாம். தமிழகத்தில் மட் டும் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும். லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த காரணத்தைக் கூறித் தான் எம்.ஜி.ஆர்., மது விற்பனையை கொண்டு வந்தார். அதே கருத்தை தான் இந்த அரசும் கொண்டுள்ளது.
வேல்முருகன் (பா.ம.க.,): போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு கடுமையாக உத்தரவு போட்டு, கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆற்காடு வீராசாமி: ‘டாஸ் மாக்’ கடைகள் இருப்பதால் தான் தமிழகத்தில் கள்ளச் சாராயம் இல்லை. மூடி விட்டால், சாராயம் ஆறாக ஓடும். மத்தியில் அமைச்சராக உள்ள அன்புமணியிடம் கூறி, பிரதமரிடமும் சோனியாவிடமும் பேசி, இந்தியா முழுக்க மது விலக்கை அமல் படுத்துமாறு வலியுறுத் தச் சொல்லுங்கள். அப்படி நடந் தால், இங்கும் மது விலக்கை அமல்படுத்த தயார்.
எதிரொலி மணியன்: மூன்று கி.மீ., க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்று கேட்டால் விதிமுறைகளை காட்டுகிறீர்கள். ஆனால், மதுக் கடைகளை மட்டும் மூன்று கி.மீ.,க்கு ஒன்று திறப்பதற்கு எப்படி வசதி வந்தது? இவ்வாறு விவாதம் நடந்தது.
நன்றி : தினமலர்
மேலே உள்ள செய்தியைப் படித்தீர்களா?.
இப்போது அடியில் காணும் அறிக்கையைப் படியுங்கள்!. இவ்விரண்டும் ஒரே கட்சியின் statement.என்னமுதலில் உள்ளது ஆளுங்கட்சியாக இருக்கும் போது உள்ள நிலை!.
கீழே உள்ளது எதிர்கட்சியாக இருந்த போது இருந்த நிலை!.எத்தனை முரண்பாடு, இந்த இரண்டிற்க்கும் என்று, நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.
1984-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக வின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி.
மதுபானகடைகளைத் திறந்து இதன் காரணமாகக் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுவருவதை நாட்டு மக்கள் நன்குஅறிவர்.
நாங்கள் இந்த நாற்றமெடுத்துக் கிடக்கும் சாராய சாம்ராஜ்யத்திற்க்கு முடிவு கட்டியே தீருவோம் என்று உறுதி கூறுகிறோம்.
கழக ஆட்சியில் கடுகளவு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றைத் திருத்திக்கொள்ள நாங்கள்தவறியதே இல்லை.
இன்றோ கடலளவு தவறுகள்!. அதில் கவிழ்ந்த படகாய் தமிழகம் தத்தளிக்கிறது!. தடுமாறுகிறது!.
அதனைக் கரை சேர்க்கும் வல்லமை கழகத்திற்க்கு உண்டென நம்புவீர்!.
பொழுதுக்கொரு பொய்---வேளைக்கொரு புளுகு. இப்படித்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களைஏமாற்றுகிறார்கள்!.
இனியும் ஏமாறத்தாயாராக இருக்கிறதா தமிழ் இனம்?. இதுதான் எங்கள் கேள்வி!.
இதே கேள்வியைத்தான் இப்போது பாமகவினர் மக்களைப் பார்த்து கேட்கிறார்கள்.அடுத்த ஆட்சியைதப்பித்தவறி பாமகவினர் பிடித்துவிட்டால் மேலே உள்ள அறிக்கையின் படி
மீண்டும் திமுகவினர்தமிழ் இனத்தைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்.
தொந்திரவே இல்லாமல் ஒரே அறிக்கை, எல்லா கட்சியினருக்கும் போதும்!.ஜனங்கள் எப்போதும் போல 'பார்' களில்!. வாழ்க தமிழ் இனம்!....
மதுக்கடைகளை ஒழிப்போம்---- திமுக
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தண்ணி எப்போதும் தமிழ் நாட்டில் தீராது!.தீருவதற்க்கு இதென்ன காவேரியா?
தண்ணி எப்போதும் தமிழ் நாட்டில் தீராது!.தீருவதற்க்கு இதென்ன காவேரியா?
:)
:)))
Post a Comment