ஒகேனக்கல் விஷயத்தில் கருணாநிதியின் அறிவிப்பு அவரைப் பற்றி,அவரது அரசியலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு எந்தவித ஆர்ச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்காது!.அவருடைய கையாலாகத்தனம்,பல சந்தர்ப்ப்ங்களில் நாம் பார்த்த ஒன்று.பொதுவாகவே அவருடைய கையாலாகாத்தனத்திற்க்கு, அவருடைய அரசியல் பேராசையே காரணம். அவர் எப்போதுமே தம்(குடும்ப)நலத்தைத் தவிர, தமிழர்களின் நலனை சிந்தித்ததே இல்லை.நான்கைந்து மாதங்களாகவே ஒகேனக்கல்லில் கன்னட அமைப்பினர் ஒரு குறிப்பிட்ட மணல் திட்டின் மீது உரிமை கொண்டாடி பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.அப்போதே அந்த விஷயத்தை அடக்கி இருக்கலாம்.
1974-ல் இதேகாங்கிரசுக்காக, காங்கிரஸின், கர்நாடக ஓட்டுகளுக்குக்காகஇந்திராவிடம், காவிரியை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டின் நலனை அதே காவிரியிலேயே தலை முழுகினார்.இப்போதும் அதே காங்கிரசுக்காக ஒகேனக்கல் விஷயத்தில் அடங்கி, குடிநீர் திட்டத்தை கை விடத் தொடங்கி விட்டார்.சோனியா ஜாடை காட்டியவுடன் இவர்அடங்கிவிட்டார்.தேசியகட்சிகளெல்லாம் மாநில கட்சிகளைப் போன்று குறிப்பிட்ட எல்லையில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டன.ஆனால் கருணாநிதி அடங்கிப்போய் தன் மாநில நலனை விட்டுக்கொடுத்து தம்முடைய தேசிய உணர்ச்சியைக் காட்டுகிறார்.
வாய் சொல்லில் வீரரடி என்று பாரதி கருணாநிதிக்காகவே பாடினார் போலிருக்கிறது!.
10 comments:
//வாய் சொல்லில் வீரரடி என்று பாரதி கருணாநிதிக்காகவே பாடினார் போலிருக்கிறது//
இத்துப்போன ரீல் அய்யா,
அது மட்டுமல்ல;அதுக்கு முன்னாடி "வஞ்சனை செய்வாரடி"ன்னும் கருணாநிதி மாதிரி ஆளுங்களை மனதில் வைத்து தான் பாடினார்.
பாலா
//அது மட்டுமல்ல;அதுக்கு முன்னாடி "வஞ்சனை செய்வாரடி"ன்னும் கருணாநிதி மாதிரி ஆளுங்களை மனதில் வைத்து தான் பாடினார்.//
முன்னயாவது அரசியல்வாதிகள் தவறுசெய்யறத்துக்கு யோசனை செஞ்சாங்க இப்ப கவலையே படறதில்லே!.
நன்றி... பாலா அவர்களே!
இதப்பத்தி இன்னும் பேச நிறையா இருக்கு!
:D B-( B-) :D
தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பதற்காகத்தான் என்று கலைஞர் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறில்லையே. பாரதத்தின் புத்திரர்கள் நாம் சண்டையிட்டால் எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடாதா. நாம் வல்லரசாக வீர நடை போட வேண்டாமா?
பாரத் மாதா கீ ஜே.
//தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பதற்காகத்தான் என்று கலைஞர் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறில்லையே//
தேசத்தின் ஒற்றுமையை அவர் இந்திய அமைதிப்படை இலங்கை யிலிருந்து திரும்பி வரும் போது காட்டியதே போதும்!
தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பதற்காகத்தான் என்று கலைஞர் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறில்லையே. பாரதத்தின் புத்திரர்கள் நாம் சண்டையிட்டால் எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடாதா. நாம் வல்லரசாக வீர நடை போட வேண்டாமா?
அய்யா அனானி வணக்கம்!
நீங்க சொல்றது புரியது. நல்ல தேசிய சிந்தனை உள்ளதாலே கலைஞர் இப்படி முடிவெடுத்திருக்கிறார். நல்லது.
ஆனால் இதற்கு முன்னால் ஏன் இப்படி எங்கள் எலும்பை முறித்தாலும் இந்த திட்டத்தை நடத்தாமல் விடோம் என் அறை கூவல் விடுத்தார்.
அப்போது தன்னை தேசியவாதி என்பதை மறந்து விட்டிருந்தாரோ?
கர்நாடகம் X( காங்கிரஸ் ~X( + :-@ கருணாநிதி ^#(^ தமிழக மக்கள் :-w
உங்கள் பதிவுகளை படித்துப்பார்த்ததில் உங்கள் காழ்ப்புணர்ச்சி பளிச் பளிச். விரட்டிப்பட்ட "ஜயராம" பாலா தங்களுக்கு ஓடிவந்து முதல் ஜால்ரா தட்டியிருப்பதே சாட்சி
8-> :-?? %-(
8-> ^#(^ :D
Post a Comment